Books / Thirumurai 6

86. 6.94 நின்ற - திருத்தாண்டகம்௿

6.94.1

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி௿
இயமான னாயெறியுங் காற்று மாகி௿
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி௿
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்௿
பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்௿
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி௿
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி௿
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.

6.94.1

6.94.2

மண்ணாகி விண்ணாகி மலையு மாகி௿
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்௿
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்௿
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்௿
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்௿
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி௿
எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகி௿
எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.

6.94.2

6.94.3

கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்௿
காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப்௿
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்௿
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்௿
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்௿
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி௿
நெல்லாகி நிலனாகி நீரு மாகி௿
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

6.94.3

6.94.4

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்௿
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்௿
கூற்றாகிக் கூற்றுதைத்தகொல் களிறு மாகிக்௿
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்௿
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி௿
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி௿
ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகி௿
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

6.94.4

6.94.5

தீயாகி நீராகித் திண்மை யாகித்௿
திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித்௿
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்௿
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்௿
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற௿
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி௿
நீயாகி நானாகி நேர்மை யாகி௿
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

6.94.5

6.94.6

அங்கமா யாதியாய் வேத மாகி௿
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்௿
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்௿
பான்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்௿
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்௿
கடலாகி மலையாகிக் கழியு மாகி௿
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி௿
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

6.94.6

6.94.7

மாதா பிதாவாகி மக்க ளாகி௿
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்௿
கோதா விரியாய்க் குமரி யாகிக்௿
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்௿
போதாய மலர்கொண்டு போற்றி நின்று௿
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி௿
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி௿
அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.

6.94.7

6.94.8

ஆவாகி ஆவினில் ஐந்து மாகி௿
அறிவாகி அழலாகி அவியு மாகி௿
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி௿
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்௿
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்௿
பூக்குளால் வாசமாய் நின்றா னாகித்௿
தேவாகித் தேவர் முதலு மாகிச்௿
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

6.94.8

6.94.9

நீராகி நீளகலந் தானே யாகி௿
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்௿
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்௿
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி௿
ஆரேனுந் தன்னடைந்தார் தம்மை யெல்லாம்௿
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்௿
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்௿
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

6.94.9

6.94.10

மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்௿
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்௿
பாலாகி எண்டிசைக்கும் எல்லை யாகிப்௿
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்௿
பூலோகப் புவலோக சுவலோ கமாய்ப்௿
பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகி௿
ஏலா தனவெலாம் ஏல்விப் பானாய்௿
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

6.94.10

6.94 — note

௿